குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18-ல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜுன் 25-ல் தொடங்கும் – தலைமைத் தேர்தல் ஆணையர்
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஜுன் 29 ஆகும் – தலைமைத் தேர்தல் ஆணையர்
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜுன் 30-ல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜுலை 2 என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜுலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது
ஜுலை 21-ல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர், இந்திய குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்பது விதி
மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மதிப்பு வேறுபடும்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயம் – தலைமைத் தேர்தல் ஆணையர்
776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4120 சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் ஒரு தமிழக எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும்
நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும், நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்