கூட்டுறவு வங்கிகளில் 100% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்த நகை கடன்கள் 100 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் 5சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து, அதற்கான அறிவிப்பானையை முதல்வர் பதவி ஏற்றதும் ஸ்டாலின் அறிவித்திதார். ஆனால், இது தொடர்பாக நடை பெற்ற ஆய்வில், பலர், போலி நகைகள் வைத்து முறைகேடாக நகைக்கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில்  5 ஆயிரத்து 13 கோடி ரூபாய்  அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கு உட்பட்ட நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.