திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றஞ்சாட்டினார். அவருடைய குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் முதலமைச்சர் கலி பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக ஸ்வப்னா சுரேஷ் மீது திருவனந்தபுரம் போலீசில் அளித்தார். இதன் அடிப்படையில், ஸ்வப்னா சூயஸ் மீது போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்த வழக்கில் மின் ஜாமீன் கேட்டு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் மனுதாக்கல் செய்தார்.