ஹனோய்:கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், வியட்நாம் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார். தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில், ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுதும் விற்பனை செய்தது. இதன் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய சுகாதாரத்துறைக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயன் தான் லாங் மற்றும் முன்னாள் அறிவியல் துறை அமைச்சரும், ஹனோய் நகர மேயருமான சூ காக ஆன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை தவிர, அமைச்சக அதிகாரிகள், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த தலைவர்கள், ராணுவ ஜெனரல்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹனோய்:கொரோனா பரிசோதனை கருவிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், வியட்நாம் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார்.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.