சுற்றுலா யாத்திரை மூலம் இரண்டு நாடுகளை இணைக்கும் முதல் ரெயில்வே என்ற பெருமையை இந்திய ரெயில்வே பெறுகிறது.
ராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலாப்பயணிகள் ஒருசேர கண்டுரசிக்க ராமாயண் யாத்ரா என்ற திட்டத்தை இந்திய ரெயில்வே செயல்படுத்துகிறது.
டெல்லியிலிருந்து வருகிற 21 ஆம் தேதி புறப்படும் இந்த ஆன்மீக சுற்றுலா ரயில் உத்தரப்பிரதேசம்,பீகார், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், நேபாளத்தில் உள்ள ராமாயண ஸ்தலங்களையும் ஒருங்கிணைத்து சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கிறது. மொத்தம் 600 பேர் இந்த ரயிலில் பயணிக்கலாம். ஒரு நபருக்கு 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாகும்.