சேனல்களால் நாட்டுக்கு தர்மசங்கடம்.. ‘எடிட்டர்ஸ் கில்டு’ குற்றச்சாட்டு..!

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு முஸ்லிம் நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இரு சமூகத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர்.

நாடு முழுதும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ள கண்டனத்தில், ‘ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் சமூகம் மற்றும் அவர்களது மத நம்பிக்கை குறித்து ஒரு தொலைக்காட்சி வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும், பொறுப்பற்ற வகையிலும் பேசி நாட்டில் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தி உள்ளது.
Withdraw FIRs Filed to Harass, Browbeat Journalists Reporting Farmers  Protest: Editors Guild of India | Himachal Watcher
இதன் காரணமாக நாட்டுக்கு தர்மசங்கடமான நிலை உருவாகி உள்ளது. மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான நம் நாட்டின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து பல்வேறு நாடுகளும் கேள்வி எழுப்பியுள்ளன. மதச்சார்பின்மை மீதான நம் உறுதிப்பாட்டின் மீது தொலைக்காட்சி நிறுவனங்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

அத்துடன், மத ரீதியிலான விவகாரங்களில் ‘இந்திய பிரஸ் கவுன்சில்’ வெளியிட்டுள்ள பத்திரிகை நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி இருந்தாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையை தவிர்த்து இருக்க முடியும்.

பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும், லாப நோக்கத்திற்காகவும் இந்த சமூகத்தில் நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் என்பதை விமர்சனக் கண்கொண்டு பாருங்கள்.

இனியாவது இதுபோன்று நடக்காமல் இருக்க தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகையாளர் அமைப்புகள் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.