மிருகக்காட்சி சாலையில் கொரில்லா ஒன்று சைக்கிளில் ஹாயாக வலம் வந்ததும், பின்னர் கீழே விழுந்த ஆத்திரத்தில் அது செய்த செயலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது முதலாக, உலகத்தில் நடக்கும் பல்வேறு விசித்திர சம்பவங்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மீன்கள் என பலதரப்பட்ட உயிரினங்களின் புத்திசாலித்தனமான செயல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஒருவேளை இவையாவும் வீடியோவாக பதிவு செய்யப்படாமல் இருந்து, செவிவழி செய்தியாக மட்டுமே நம்மை எட்டியிருந்தால் நிச்சயம் இவற்றை நாம் நம்பியிருக்க மாட்டோம் எனக் கூறும் அளவுக்கு அவற்றின் செயல்கள் இருக்கின்றன. இணையதளத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன.
அந்த வகையில், இந்திய வனத்துறை அதிகாரி சாம்ராட் கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் கொரில்லா ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு மனிதனை போல தனது இடத்தை ஜாலியாக சுற்றி வருகிறது. அதை மற்றொரு கொரில்லா அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருகட்டத்தில், சைக்கிளை நிறுத்த முயன்ற போது பேலன்ஸ் தவறி கொரில்லா கீழே விழுகிறது. சிறிது நேரம் விழுந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருந்த கொரில்லா, தன்னை சைக்கிள்தான் கீழே தள்ளிவிட்டதாக நினைத்து அந்த சைக்கிளை தூக்கி வீசுகிறது.
https://twitter.com/IfsSamrat/status/1534384931698364416?s=20&t=GquZDYYUdliMSgG_tBAx-w
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நெட்டீசன்களில் கிண்டலான ஜாலியான கமெண்ட்டுகளை ஈர்த்து வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM