ஐடி துறை சார்ந்த பங்குகள் சமீபத்திய வாரங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் பல முதலீட்டாளர்களுக்கும் இப்பங்குகளை வாங்கலாமா? இருக்கும் பங்குகளை என்ன செய்யலாம்? என பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.
குறிப்பாக கடந்த 5 மாதங்களில் நிஃப்டி ஐடி குறியீடானது 24% சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி இந்த காலக்கட்டத்தில் 6% மட்டுமே சரிவினைக் கண்டுள்ளது.
இந்திய சந்தையில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தையிலும் டெக்னாலஜி பங்குகள் கணிசமான சரிவினைக் கண்டுள்ளன.
சேலம், ஈரோடு-க்கு வரும் ஐடி, டெக் நிறுவனங்கள்..!!
ஏன் சரிவு?
ஐடி பங்குகளில் பெரும்பாலான பங்குகள் ஒவர் வேல்யூவில் இருந்ததால் சரிவினைக் கண்டதாகவும், அதோடு புராபிட் புக்கிங் காரணமாகவும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. எனினும் வருவாய் விகிதமானது தொடர்ந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. ஆக சிறியளவில் சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்திய ஐடி துறை
பிலிப்ஸ்கேப்பிட்டல் தரகு நிறுவனம் பங்கு விலையில் இருந்த திருத்தத்தின் மத்தியில், விரைவில் தலைகீழ் மாற்றம் இருக்கலாம். அது தற்போதைய நிலையில் இருந்து நல்ல வருமானத்தினை கொடுக்கலாம். குறிப்பாக இந்திய ஐடி துறையில் நல்ல வளர்ச்சி இருந்து வருகின்றது. ஆக இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இலக்கு விலை
எம்பஸிஸ் நிறுவனத்தின் இலக்கு விலை 3560 ரூபாயாகவும், இதே மைண்ட் ட்ரீ பங்கின் இலக்கு விலை 4300 ரூபாயாகவும், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் 4330 ரூபாயாகவும், எல் டி ஐ – 5400 ரூபாயாகவும், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நீறுவனத்தின் பங்கு விலையானது 4270 ரூபாயாகவும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இலக்கு விலையானது 1930 ரூபாயாகவும் தரகு நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
நடு நிலை நிலைப்பாடு
விப்ரோ நிறுவனத்தின் இலக்கு விலையாக 560 ரூபாயாகவும், கோஃபோர்ஜ் பங்கு விலை 5000 ரூபாயாகவும் தரகு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது தவிர ஹெச் சி எல் டெக், டெக் மகேந்திரா, எல் டி டி எஸ், சியாண்ட் மற்றும் கேபிஐடி டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் நடு நிலையாக உள்ளது.
ஏற்றம் காணலாம்
கடந்த 5 மாதங்களில் ஐடி துறையானது கணிசமாக சரிவினைக் கண்டுள்ளது. எனினும் தற்போது அதிக வருவாய் மற்றும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. சர்வதேச சந்தையில் ஐடி துறையில் தாக்கம் இருந்தாலும், இந்த சரிவானது தற்காலிகமாக இருக்கலாம். இந்திய ஐடி நிறுவனங்களில் இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் நிறுவன பங்குகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share broking firm gives buy tags to TCS, infosys, wipro and other IT stocks
IT sector has seen a significant decline in the last 5 months. However there is a higher return now and a brighter future. Experts predict that IT stocks may rise in price.