ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கிடம் விற்பது குறித்து ஆகஸ்ட் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தரவுகளை தராததை அடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட உள்ளதாக எலான் மஸ்க் எச்சரித்தார். இதையடுத்து எலான் மஸ்கிடம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கொள்வதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது