‘தளபதி 66’ படத்தில் விஜய் லுக் லீக் – மூன்றாவது முறையாக இணைந்த சீனியர் நடிகை?

‘தளபதி 66’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜயின் கெட்டப் வெளியாகி, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நெல்சன் இயக்கத்தில், விஜயின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியானது ‘பீஸ்ட்’ படம். இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததை அடுத்து அதிகளவிலான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் புதியப் படத்தில் நடித்து வருகிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்-க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் சென்னையில் நடைபெற்றநிலையில், பின்னர் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் சேர்ந்து நடிக்கும் பெரும்பாலான பகுதிகள் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.

image

இதனைத் தொடர்ந்து சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜயின் கெட்டப் குறித்து பெரும் ஆர்வம் நிலவி வந்தநிலையில், படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் விஜயின் லுக் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகை குஷ்பு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் அவர் கலந்துகொண்டுள்ள புகைப்படமும் வெளியாகி இந்தப் படத்தில் குஷ்பூ நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. விஜயின் நடிப்பில் வெளியான ‘மின்சார கண்ணா’ படத்தில் கதாநாயகியின் அக்காவாக குஷ்பூ நடித்திருப்பார்.

image

அதன்பிறகு ‘வில்லு’ படத்தில் விஜயுடன் பாடல் ஒன்றில் இணைந்து நடித்திருப்பார் நடிகை குஷ்பூ. இந்த இரண்டு படங்களை அடுத்து நடிகை குஷ்பூ இந்தப் படத்தில் 3-வது முறையாக இணைந்துள்ளார். ‘தளபதி 66’ படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெய சுதா, யோகி பாபு, ஷாம், ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.