தெற்கு தாய்லாந்தின் டிராங் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டுக்காயங்களுடன் கரைஒதுங்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் செல்ல பொதுமக்கள் உதவினர்.
கடல்பசுவின் உடலில் காணப்பட்ட ஆழமான வெட்டுக்காயங்களில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் கரையில் நின்றிருந்த சிலர் காயங்களின் எரிச்சலை குறைக்கும் வகையில் அதன்மீது கடல் நீரை ஊற்றினர்.
பின்னர் தார்ப்பாய் மீது வைத்து அது மீண்டும் அந்தமான் கடலுக்குள் செல்ல அவர்கள் உதவிபுரிந்தனர். சிலர் கடல் பசுவுடன் சிறிது தூரம் வரை உள்ளே நீந்தியும் சென்றனர்.