விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைத்துறை சார்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்ட இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. திருமணத்தின்போது நயன்தாரா அணிந்திருந்த புடவை மற்றும் அணிகலன்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு இதோ…
நயன்தாரா தன்னுடைய திருமணத்துக்கு சிவப்பு நிறப் புடவை அணிவார், பச்சை நிறப் புடவை அணிவார் என பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், நயன் அணிந்திருந்த சிவப்பு நிற புடவை ஸ்பெஷலானது. கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அடர்சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். இதில் செய்யப்பட்ட எம்பிராய்டரி டிசைன்கள் கர்நாடக கோவில்களின் வடிவமைப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.
இதனை கரிஷ்மா மற்றும் மோனிகா என்ற வட இந்திய டிசைனர்கள் வடிவமைத்துள்ளனர். நயனின் பிளவுஸில் பெண் தெய்வம் லட்சுமியின் ‘மோட்டிவ்’ டிசைன்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. மேலும் விக்கி, நயன் இருவரின் பெயர்கள், காதலைப் பறைசாற்றும் பேட்டர்ன்கள் என சின்ன சின்ன வடிவங்களால் பிளவுஸ் முழுவதும் டிசைன் செய்யப்படடிருந்தது.
சிவப்பு நிறப் புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் வைடூரிய அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் நயன்தாரா. மூன்று வகையான அணிகலன்களை அவர் கழுத்தில் அணிந்திருந்தார். கழுத்தையொட்டி அணிந்திருந்த சோக்கர் வைடூரியம் மற்றும் போல்கி கற்களால் ஆனது.
இரண்டாவதாக மரகதத்தால் ஆன ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட ஆரம் அணிந்திருந்தார். இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மகரதக் கற்களால் ஆனது. மேலும் நயன் அணிந்திருந்த கம்மலில் cabchon என்ற கல் வகையைச் சுற்றி வைடூரிய கற்கள், வைர கற்களால் பதிக்கப்பட்டிருந்தன. நயன் அணிந்திருந்த வளையலும் மரகதக் கற்களால் ஆனது. இந்த நகை இந்திய மதிப்பின்படி கோடிகளைத் தாண்டும்.