வங்கிகளில் கடன் வாங்கிய பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். என்ன தான் நீங்கள் சரியான கொலட்ரால் செக்யூரிட்டி என கொடுத்தாலும், ஜாமீன் போட வேண்டும் என கூறியிருக்கலாம். இது வங்கிகளில் மட்டும் அல்ல, தனியார் துறைகளிலும் உண்டு.
அப்படி ஜாமீன் போட்டு விட்டு விழிபிதுங்கும் பலரையும் நாம் பார்த்திருக்கலாம். உண்மையில் ஜாமீன் என்றால் என்ன? ஜாமீன் போடுபவர்களுக்கு என்ன பிரச்சனை வரலாம்? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஜாமீன் என்றால் என்ன?
பொதுவாக வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை முறையாக செலுத்தாத போது, அந்த கடனை நான் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என வாடிக்கையாளர் சார்பில் உத்தரவாதம் அளிப்பது தான். ஆக இதனால் தான் சிக்கலே. ஏனெனில் கடன் வாங்கியவர் சரியான நேரத்தில் கடனை செலுத்திவிட்டால் பரவாயில்லை, செலுத்தாத பட்சத்தில் ஜாமீன் போட்டவரை வங்கிகள் அணுகுகின்றன.
யாரெல்லாம் ஜாமீன் போடலாம்?
கடன் வாங்கியவர் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு திறனுள்ளவராக இருக்க வேண்டும். நிதி பலன் உள்ளவராக இருக்க வேண்டும். கடன் பெற்றவரை திருப்பிச் செலுத்தும் படி சொல்லும் உரிமை உள்ளவர்கள் மட்டுமே ஜாமீன் கையெழுத்து போட முடியும். கடன்பெறுபவருக்கு இருக்க வேண்டிய திருப்பி செலுத்தும் திறன், ஜாமீன் போடுபருக்கும் இருக்க வேண்டும். ஜாமீன் போடுபவருக்கும் கடன் தொகைக்கு நிகராக சொத்து இருக்க வேண்டும்.
கடனுக்கு பொறுப்பாக முடியுமா?
கடன் வாங்கியவர் வங்கிக் கடனை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால், ஜாமீன்தார் மீதும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க, முடியும். சட்டப்படி கடன் பெற்றவர் அந்தக் கடனைத் திருப்பி செலுத்தும் வரையில் ஜாமீன் போட்டவர்களுக்கும் கடன் மீதான பொறுப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.
நோட்டீஸ் அனுப்பலாம்
கடனை வாங்கியவர் கடனைத் திருப்ப செலுத்தாத பட்சத்தில் அது தொடப்பாக ஜாமீன் போட்டவருக்கும் வங்கி கடன் நிலுவைத் தொடர்பாக ரிமைண்டர் நோட்டீஸ் அனுப்பலாம். அதே போல ரீ கால் நோட்டீஸூம் ஜாமீன் கையெழுத்திட்டவருக்கு அனுப்ப முடியும்.
பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
ஆக மேற்கண்ட சிக்கல்களை தவிர்க்க, கடன் வாங்கியவர், ஜாமீன் கையெழுத்திட்டவர் இருவரும் சேர்ந்து வங்கிக்கு சென்று கடனைத் திருப்பி செலுத்த முடியாததற்கு சரியான காரணத்தை சொல்லி, கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறோம் என்று எழுத்துபூர்வமாக வேண்டுகோள் விடுக்கலாம். அப்படி கொடுக்கும் பட்சத்தில் வங்கிகள் நடவடிக்கையை தாற்காலிகமாக நடவடிக்கையை எடுக்கலாம்.
எச்சரிக்கையா இருங்க?
ஆக இனி யாருக்கேனும் ஜாமீன் கையெழுத்து போடவோ அல்லது, போட்டிருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும். இது வங்கிகளில் மட்டும் அல்ல, தனியாரிடம் கடன் வாங்கும்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.
facts to know before signing for bank guarantee? check details
facts to know before signing for bank guarantee? What are the things to look out for?