வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: சிறையில் உள்ள மஹாராஷ்டிரா மாநில இரு அமைச்சர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதால், நாளை நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி.,பதவிக்கு நாளை (ஜூன 10) தேர்தல் நடக்கிறது. இதில் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வர்.
இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் உள்ள நவாப் மாலிக் , நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருந்தது மற்றும் பணமோசடி ஆகிய வழக்குகளில் சிறையில் உள்ளார். மற்றொரு அமைச்சர் அனில் தேஷ்முக், லஞ்ச வழக்கிலும் சிறையில் உள்ளனர்.
இருவரும் வரும் ராஜ்யபசபா தேர்தலில் ஒட்டளிக்க வேண்டி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்ததையடுத்து, இருவரும் நாளை நடக்க உள்ள தேர்தலில் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement