Tamil Nadu to return 8,000 acres, நிலக்கரி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட சுமார் 8000 ஏக்கர் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கம் அமைக்க ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள12 கிராமங்களில் இருந்து 8000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35,000 தரப்பட உள்ளது என்றும் அதை உரிமையாளர்களே வைத்துகொள்ளலாம் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் சாத்தியமில்லை என்பதால் இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக என்எல்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி கணேஷ் கூறுகையில் ‘ ஜெயங்கொண்டம் திட்டத்தை கடந்த 2017 செப்டம்பர் மாதத்தில் கைவிட்டுவிட்டோம். பொருளாதார ரீதியாக அந்த திட்டம் சாத்தியமாகாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
இந்த அறிவிப்பை வரவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைந்த இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக இழப்பீடு தொகை வழங்க வேண்டு என்று பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது என்றும் அவர் தெரிவித்தார்.