உத்தரப் பிரதேச மாநிலம், யமுனாபுரம் காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் எந்த நேரமும் ஆன்லைனில் பப்ஜி கேம் ஆடுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளான். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ள அந்த சிறுவனை அவரது தாய் சில தினங்களுக்கு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், அவரது தாயை துப்பாக்கியால் இதை கண்டித்த தாயை அந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளான். தனது கொலைக் குற்றத்தை மறைக்க, இறந்த தாயின் உடலை ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளான் அச்சிறுவன்.
இரண்டு நாட்கள் கழித்து உடம்பில் இருந்து துர்நாற்றம் வரவே, நடந்த சம்பவத்தை மேற்கு வங்கத்தில் உள்ள தன் தந்தைக்கு சிறுவன் செல்ஃபோனில் தகவலாக தெரிவித்துள்ளான்.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரித்தபோது, தாயை கொன்றதை சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான். சம்பவத்தின்போது சிறுவனின் சகோதரியும் உடன் இருந்துள்ளார். அவரையும் அந்த சிறுவன் மிரட்டி அறையில் அடைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
சிறுவனின் தந்தை மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றிவரும் நிலையில், அவர் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் தாயை சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.