Nayanthara Vignesh Shivan Wedding Dress Viral : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. அதேபோல் சிம்பு வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் இணைந்து நானும் ரவுடிதான் படத்தை கொடுத்தனர். கடந்த 2015-ம் ஆண்டு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அன்றில் இருந்து கடந்த 6 வருடங்களாக தென்னிந்திய திரையுலகின் ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் இந்து முறைப்படி விக்னேஷ’ சிவன் நயன்தாரா திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திருமணத்தின் போது மணமக்களான நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அணிந்திருந்த உடைகள் பெரிய கவனம் ஈர்த்துள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் பாரம்பரியம் மற்றும் குடும்ப மரபுகளை கவுரவிக்கும் விதமாக தனக்கென பெரிய நாளுக்கான, இன்று மணமகள் நயன்தாரா சிவப்பு நிற லெஹங்காவிற்கு மேல் புடவையை அணிந்துகொள்ள தேர்ந்தெடுத்துள்ளார். திருமண விழாவிற்கு, ஜேட் மோனிகா ஷாவால் வடிவமைக்கப்பட்ட வெர்மில்லியன் என்ற சிவப்பு நிற ஆடையை நயன்தாரா அணிந்திருந்தார்.
புதுமணத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது சமூகவலைதளங்களில் ஒரு சில அழகான படங்களைப் பகிர்ந்துள்ளனர். வாழ்நாளில் காலத்தால் அழியாத மணப்பெண் தோற்றத்தை நயன்தாராவுக்கு மோனிகா ஷாவும் கரிஷ்மா ஸ்வாலியும் நேர்த்தியாகவும் நவீனமாகவும் உருவாக்கியுள்ளனர்.
நயன்தாரா திருமண ஆடை
ஆரம்பத்திலிருந்தே, நயன்தாரா தான் சமகால மற்றும் பாரம்பரியமான ஆடைகளை அணிய விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்தார். எனவே, நயன்தாராவின் திருமண நாள் தோற்றம் தொடர்பான விருப்பத்தை ஜேட் மோனிகா ஷா சமரசம் செய்யாமல் நேர்த்தியாக செய்துள்ளார். லெஹெங்காவுக்கு மேல் புடவையில் இருக்க நயன்தாரா ஆர்வம் காட்டியதால், தோற்றத்தை அதிகரிக்க, வடிவமைப்பாளர் ஆடையின் நீளத்தை முக்காடாக வடிவமைத்துள்ளார். இந்த தோற்றத்தில் நயன்தாரா முழு கவனத்தை ஈர்து்துள்ளார்.
கைகளைச் சுற்றி , லக்ஷ்மி தேவி செழுமையையும் அதிர்ஷ்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால், ரவிக்கை மீது பாஜுபந்தாக லக்ஷ்மி உருவங்களை மறுவடிவமைத்துள்ளது. நயன்தாராவின் ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஒரு நல்ல தொடுதலை சேர்க்க மோனிகாவும் அவரது குழுவினரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 4வது சபதத்தைக் குறிக்கும் வகையில், ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் குறிக்கும் பல வடிவங்கள் இந்த ஆடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் திருமண ஆடை
திரைப்படத் தயாரிப்பாளரும் இப்போது மணமகனான விக்னேஷ் சிவனின் திருமண உடையில் பாரம்பரியத் தன்மையும் உள்ளது. இது நான்கு ஃபெராக்களுடன் எதிரொலிப்பதால், ஒரு வேஷ்டி, குர்தா மற்றும் சால்வையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் – இவை அனைத்தும் ஜேட் அட்லியரின் தலைசிறந்த கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்டவை. சால்வையில் கைவினைப்பொருளான ‘ஏக் தார்’ எம்பிராய்டரி உள்ளது.