லண்டன்:பிரிட்டனில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பிரிட்டன் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 176 ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்நாட்டு அரசு, இந்தாண்டு மார்ச்சில் பெட்ரோல், டீசல் வரியை குறைத்தது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, 48 ரூபாய் வீதம் குறைந்துள்ளது.
ஆனால் பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த வரி குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்ற புகார் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ‘எண்ணெய் நிறுவனங்கள் வரி குறைப்பு பயனை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும்’ என, அரசு தெரிவித்துள்ளது.
லண்டன்:பிரிட்டனில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.