ரஷ்யா நடத்திவரும் போர் தாக்குதலில் 100 முதல் 200 ராணுவ வீரர்களை தினமும் உக்ரைன் இழப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் மைக்கைலோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தாக்குதலில் இருநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் ராணுவம் ஒருநாளைக்கு 100 முதல் 200 ராணுவ வீரர்களை இழப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் மைக்கைலோ போடோல்யாக் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போர் தாக்குதலில் ரஷ்யா அணுஆயுதங்களை தவிர்த்து அதன் கனரக பீரங்கிகள், பல ராக்கெட் ஏவுதல் அமைப்புகள்(multiple rocket launch systems)மற்றும் விமானப்படை தாக்குதல் என அனைத்து ஆயுதங்களையும் உக்ரைன் மீது வீசுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் டான்பாஸ் பகுதியை முழுவதுமாக கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய வீரர்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதனால் உக்ரைன் வீரர்கள் தினம் தினம் இடைவிடாத குண்டு வெடிப்புகளுக்கு கிழ் உக்ரைனை பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஆயுதங்களுடன் ஓப்பிடுகையில் இது “சமநிலையின் முழுமையான பற்றாக்குறை” எனவும், அதனால் உக்ரைனுக்கு கூடுதலான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில் ரஷ்யாவுடன் சமன் செய்வதற்கு உக்ரைனுக்கு கூடுதலாக 150 முதல் 300 ராக்கெட் ஏவும் அமைப்புகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசிய மைக்கைலோ போடோல்யாக், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றபட்ட அதன் நிலபரப்புகளை திரும்பி அளித்துவிட்டு, பிப்ரவரி 24ம் திகதிக்கு முந்திய நிலைகளுக்கு ரஷ்ய படைகள் திரும்பினால் மட்டுமே உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தரும் என தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் தீவிர மோதலில், உக்ரைன் ஒருநாளைக்கு 100 முதல் 200 வீரர்களை இழப்பதாகவும் இது முந்தைய மதிப்பீடுகளை விட அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பள்ளி சிறுவர்களுக்கு ரஷ்ய வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம்: அருவருப்பாக இருப்பதாக ஆசிரியர் கருத்து!
இதற்கு முன்னாத வியாழன்கிழமை உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ்(Oleksii Reznikov)தெரிவித்த தகவலில் அடிப்படையில், உக்ரைன் ஒருநாளைக்கு குறைந்தது 100 வீரர்களை இழப்பதாகவும், 500 வீரர்கள் வரை படுகாயமடைவதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.