மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தனர்.
ஜனாதிபதி மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் தூதுவர்களிடம் விளக்கினார்.
தற்போதைய நிலைமையைத் தீர்ப்பதில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இதுவரை அந்நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஓமான் தூதுவர், ஜுமா ஹம்தான் ஹசன் அல் ஷெஹி, (Juma Hamdan Hassan Al Shehhi), பலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி, சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத், (Dr. Zuhair Hamdallah Zaid), குவைத் தூதுவர், கலாஃப் பு தைர், (Khalaf Bu Dhhair), கட்டார் தூதுவர், ஜாசிம் ஜாபர் அல்-சோரோர், සොරෝ (Jassim Jaber Al- Sorour), எகிப்திய தூதுவர், மெக்ட் மொஸ்லே, (Maged Mosleh), ஐக்கிய அரபு அமீரகத்தின் காலித் நஸார் அல் – எமேரி, (Khaled Nasser Al Ameri), லிபியாவின் துதுவர், நாசர் வை.எம்.அல்புர்ஜானி, (Nasser Y.M. Alfurjani), சவூதி அரேபியத் தூதுவர்(செயற்பாட்டுப் பொறுப்பு) அப்துல்லா ஏ.ஏ. ஓர்கோபி, (Abdulelah A.A. Orkobi), ஈராக் தூதுவர் (செயற்பாட்டுப் பொறுப்பு), மொஹமட் ஒபாட் ஜெபெர் அல் – மஸ்வாதி, (Mohammed Obaid Jebur Al Maswadi), சீனத் தூதுவர், சீ. சென்ஹொங், (Qi Zhenhong), அரசியல் விவகாரத் தலைவர் லுவோ சோங்(Luo Chong) மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர், கோபால் பாக்லே(Gopal Baglay) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
09.06.2022