மருத்துவ முதுநிலை படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு: நாளை நீதிமன்ற தீர்ப்பு!

காலியாக உள்ள மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1,456 மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்கள். இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற விடுமுறைக் கால சிறப்பு அமர்வு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
image
அப்போது 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு அவர்களுக்கான இடங்கள் உரிய முறையில் ஒதுக்கித் தரப்படவில்லை என்றால் நீதிமன்றமே அதனை செய்ய நேரிடும் என்றும் இதற்கான இழப்பீட்டை வழங்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க… நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம்: காங்கிரஸ் முடிவு!
இந்த விவகாரம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாகக் கூறி, நாளைய தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.