மருந்துகள் வாங்க இனி மருத்துவரின் சீட்டு தேவையில்லையா? மத்திய அரசின் அறிவிப்பு

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ஒரு சில மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் 16 வகை மருந்து மாத்திரைகளை மருந்து கடையில் மக்கள் வாங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

இதற்கான சட்டவரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட இருப்பதாகவும் இதன் காரணமாக பாராசிட்டமால் உள்பட 16 வகை மருந்து மாத்திரைகளை இனி மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடிஸ்ப்ரே விளம்பரத்தை இப்படியா எடுப்பாங்க? தடை விதித்தது மத்திய அரசு

16 வகை மருந்துகள்

16 வகை மருந்துகள்

16 வகை மருந்துகள் வாங்குவதற்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த 16 வகை மருந்துகள் தவிர மற்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

இதுகுறித்து சுகாதாரத்துறையின் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அமைச்சகம் ஆலோசனை செய்து வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ஆணையையும் வெளியிட்டுள்ளது.

மருந்துச்சீட்டு
 

மருந்துச்சீட்டு

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்க அனுமதிக்கப்படும் 16 வகை மருந்துகளில் பாரசிட்டமால், டிஸ்இன்பெக்ட் மாத்திரைகள், இருமலுக்கு சாப்பிடும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைட் லோஜன்சஸ் மருந்துகள், ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி பங்கள் க்ரீம், நாசல் டீகன்ஜசன்ஸ், அலர்ஜி மருந்துகள் ஆகிய மருந்துகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மசோதா

மசோதா

இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அதன் பிறகு குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற உடன் பொதுமக்கள் மேற்கண்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆலோசனை

பொதுமக்கள் ஆலோசனை

ஆனால் அதே நேரத்தில் இந்த மருந்துகளை வாங்கி 5 நாட்கள் பயன்படுத்திய பிறகும் நோய் குணமடையாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சம்பந்தப்பட்டவர்கள் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும் வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Centre plans to bring 16 common drugs for cough, cold, pain under over-the-counter category

entre plans to bring 16 common drugs for cough, cold, pain under over-the-counter category | மருந்துகள் வாங்க இனி மருத்துவரின் சீட்டு தேவையில்லையா? மத்திய அரசின் அறிவிப்பு

Story first published: Thursday, June 9, 2022, 17:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.