இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக் ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் லக் ஷயா சென் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் எதிர்கொண்டார்.
இதில் அவர் 21-18, 21-15 என்ற நேர் செட்களிலேயே வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.