அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று காலை அமர்விலேயே 10 பைசா சரிந்து, 77.78 ரூபாயாக சரிவினைக் கண்டது. தற்போது 77.81 ரூபாயாக வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது.
இது ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், உச்சம் எட்டி வரும் கச்சா எண்ணெய் விலை, முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணிகளும் சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ரூபாய் சரிவு
இதற்கிடையில் தான் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே 77.74 ரூபாயாக தொடங்கியது. இது கடந்த அமர்வில் 77.68 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது 77.81 ரூபாய் என்ற லெவலில் சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.
உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் எட்டி வரும் நிலையில் இதுவும் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பானது சரிவிலேயே காணப்படுகின்றது.
டாலர் மதிப்பு ஏற்றம்
வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது மற்ற நாடுகளில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். அதோடு அமெரிக்காவின் பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக முதலீடுகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
பங்கு சந்தை நிலவரம்?
இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 45.02 புள்ளிகள் அதிகரித்து, 54,937.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 8.6 புள்ளிகள் அதிகரித்து, 16,364.85 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்டுள்ளது.
சரியலாம்
எனினும் தொடர்ந்து அதிகரித்து பணவீக்கத்தின் மத்தியில் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தியில் அறிக்கை ஒன்று ரூபாய் மதிப்பு 81 ரூபாய் வரை சரியலாம் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
indian rupee hits all time low aganist US dollar : do you know why?
Indian rupee depreciated to 77.81 against the US dollar