முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான் – பாபர் அசாம் அபார சதம்

முல்தான்,

வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.அதில் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முல்தானில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து (127 ரன்) ஹரிஸ் ராப்ன் பந்து வீச்சில் போல்டு ஆனார். அவருக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்த ஷமார் புருக் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பஹர் சமான் 11 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் (65 ரன்) அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களம்இறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சசதமடித்தார்.அவர் 103ரன்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பர் மொகமது ரிஸ்வான் 59 ரன்களில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.