நடிகை நயந்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடக்கின்ற திருமண நிகழ்வுகளை பிரமாண்ட சினிமாவுக்கு நிகராக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் குழுவினர் படமாக்கினர்.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்தால் கூட 20 கோடி ரூபாய் செலவில் திருமண காட்சி படமாக்கப்படாது. ஆனால் நிஜத்தில் நயன்தாரா – விக்னேஷ் திருமண நிகழ்வுகளை 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் படமாக்கி வருகிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.
இந்த திருமண நிகழ்வில் சினிமா பாடல் காட்சியில் வருவது போல 10க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை தம்பதியர் மாற்றிக் கொண்டு நிகழ்வில் பங்கேற்பதாகவும், திருமண நிகழ்ச்சிக்கு வருகின்ற அனைவரும் ஒரே மாதிரியான டிரெஸ் கோடு குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மணமக்கள் வருகை தொடங்கி அனைத்து நிகழ்வுகளையும் ஒரு சினிமா படத்தில் வரும் காட்சி போல லைட்டிங் மற்றும் செட்டிங் செய்து கலர்புல்லாக கவுதம் வாசுதேவ் மெனனின் குழுவினர் படமாக்கினர்.
இந்த திருமண நிகழ்வு தொடர்பான காட்சிகளை தொகுப்பாக்கி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு வழங்க சுமார் 25 கோடி ரூபாய் அளவில் ஒப்பந்தம் போட்டுள்ளது, நயன் மற்றும் விக்கியின் ரவுடி பிக்சர்ஸ். அதனால் தான் அங்கு வழங்கப்படும் தண்ணீர் பாட்டில் முதல் பன்னீர் பந்தல் வரை அனைத்திலும் ஜோடிக்கிளிகளின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு காட்சிகள் தனியார் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டு விட்டதால், எவருக்கும் உள்ளே செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும் இதனை கண்காணிக்கவே 200 பவுன்சர்களும், திருமண விழாவுக்கு வரும் வி.வி.ஐ.பி களின் பாதுகாப்புக்கு என்று 2 கம்பெனி ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.