பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வூதியம் மற்றும் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 27ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யப் போவதாக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் நேற்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மற்றும் வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு (NOBW) உள்ளிட்ட ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் (UFBU) வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. மீண்டும் வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி!
ஓய்வூதியம்
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் மற்றும் திருத்துதல் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் மற்றும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது ஆகியவை வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளாக உள்ளது என UFBU கூட்டத்திற்குப் பிறகு AIBEA பொதுச் செயலாளர் C H வெங்கடாசலம் அவர்கள் தெரிவித்தார்.
வேலைநிறுத்தம்
AIBOC பொதுச் செயலாளர் சௌமியா தத்தா இந்த வேலைநிறுத்தம் குறித்து கூறுகையில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசும் வங்கிகளின் நிர்வாகமும் அக்கறையில்லாமல் இருந்தால், நாடு முழுவதும் உள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றார்.
புதிய ஓய்வு திட்டம்
புதிய ஓய்வு திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் விளக்கியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாத நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதோடு, 14 சதவீத பங்கு அரசாங்கத்தால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
பங்குச்சந்தை
புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தை அடிப்படையிலானது என்பதால் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் அமையும். மேலும் புதிய திட்டத்தில் ஜிபிஎஃப் வசதி இல்லை என்பதும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் நிலையான ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதும் வங்கி ஊழியர்களின் எதிர்ப்புகளுக்கு காரணமாக உள்ளது.
தனியார்மயம்
அதேபோல் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கும் போது பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்றும், இந்தியா முழுவதும் அனைத்து துறையிகளிலும் பணப்புழக்கம் பாதிக்கப்படும் என்றும், ஊரக வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்றும் AIBOC அமைப்பின் தலைவர் சஞ்சய் தாஸ் கூறியுள்ளார்.
வங்கி பணிகள்
ஜூன் 27 முதல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டி உள்ளதால் ஜூன் 27க்கு முன்பு பொதுமக்கள் வங்கி சம்பதமான பணிகளை முன்கூட்டியே முடித்து சுதாரித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Public sector bank employees threaten to go on strike on June 27
Public sector bank employees threaten to go on strike on June 27 |வங்கி ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக்: உஷாரா இருந்துக்கோங்க மக்களே!