வட்டி அதிகரிப்பு கைகொடுக்கலயே.. மீண்டும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்றே சரிவில் தான் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க பங்கு சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்திலேயே சற்று சரிவிலேயே தொடங்கியுள்ளது.

தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் உச்சத்தினையே எட்டி வரும் நிலையில், இது மேற்கோண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. ஆர்பிஐ அறிவிப்பு கைகொடுக்கவில்லை..!

தொடரும் ஏற்றம்?

தொடரும் ஏற்றம்?

கச்சா எண்ணெய் விலையானது தற்போது 13 வார உச்சத்தில் காணப்படும் நிலையில், தேவையானது இன்னும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் சவுதி விலையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகின்றது. ஆக இது இன்னும் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமையலாம். தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் சப்ளை சங்கிலியில் பிரச்சனையே நிலவி வருகின்றது. ஆக இது சந்தைக்கு எதிரான காரணியாக பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

இந்திய ரிசர்வ் வங்கியானது நேற்று ரெப்போ வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு வங்கிகளை 20 – 25 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரிக்க தூண்டலாம். இது சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுவதனை தடுக்கலாம். எப்படியிருப்பினும் ஜூன் 8 நிலவரப்படி, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 2484.25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள் நாட்டு முதலீட்டாளர்கள் 1904.33 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

தொடக்கம் எப்படி?
 

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேலாக சரிவிலேயே காணப்பட்டது. நிஃப்டியும் சற்று சரிவில் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் சரிவிலேயே காணப்பட்டது. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டு, 54,595 புள்ளிகளாகவும், நிஃப்டி 81 புள்ளிக்ள் குறைந்து, 16,274 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

 

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடுகள் மட்டும் மாற்றமின்றி காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், சன் பார்மா, மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

9.47 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 134.61 புள்ளிகள் குறைந்து, 54,757.88 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34.05 புள்ளிகள் குறைந்து, 16,322.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இன்று கோல் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

opening bell: indices open lower amid mixed global cues, nifty around 16,250

Sensex was down 134.61 points at 54,757.88 and the Nifty was down 34.05 points at 16,322.20. Today, stocks including Coal India, Dr Reddy’s Laboratories and ONGC are worth watching.

Story first published: Thursday, June 9, 2022, 10:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.