வருமான வரி தாக்கலில் தவறு செய்து விட்டீர்களா.. அடுத்து என்ன செய்யலாம்…!

வருமான வரி தாக்கல் என்பது முன்பெல்லாம் நாள் கணக்கில் அலுவலகம் சென்று, படிவத்தினை பூர்த்தி செய்து பின்னர் வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை. ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பரவலுக்கு பிறகு பல துறைகளிலும், டிஜிட்டல் வளர்ச்சியானது உட்புகுந்துள்ளது.

ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!

அந்த வகையில் வருமான வரித்துறையிலும் டிஜிட்டல் உட்புகுந்தது. ஆனால் ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும்ப்போது பலரும் பல தவறுகளை செய்து விடுகின்றனர். ஆனால் அதனை எப்படி சரி செய்வது? அடுத்து என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

வருமானத்தில் தவறு?

வருமானத்தில் தவறு?

பலரும் செய்யும் ஒரு தவறு உங்கள் வருமானத்தினை தவறாக சுட்டி காட்டிவிடுவது. உங்கள் வருமானத்தில் என்னென்ன கழிவுகள் உள்ளன. என்ன வகையான சேமிப்புகள் உள்ளது. நாம் இறுதியாக செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து செலுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு செலுத்த வேண்டிய வரியையும் ஆன்லைனிலேயே செலுத்திக் கொள்ளலாம்.

இப்படியும் பிரச்சனை ஏற்படலாம்?

இப்படியும் பிரச்சனை ஏற்படலாம்?

ஆனால் வருமான வரி தாக்கலுக்கு சில தினங்களே உள்ள நேரத்தில் தான் பலருக்கும் தாக்கல் செய்வோம். அப்படி செய்யும்ப்பொது இணைய பிரச்சனை ஏற்படலாம். கடைசி நேரத்தில் தாக்கல் செய்யும்போதும் சர்வரிலும் பிரச்சனை ஏற்படலாம். ஆக அதனையும் நினைவில்கொண்டு முன் கூட்டியே செயல்பட வேண்டும்.

ரிவைஸ்டு ரிட்டர்ன்
 

ரிவைஸ்டு ரிட்டர்ன்

2வதாக ஒருவர் வருமான வரி தாக்கலில் ஏதேனும் தவறு இருந்தால், ரிவைஸ்டு ரிட்டர்ன் எனப்படும் திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்ய முடியும். ஆக ரிவைஸ்டு ரிட்டர்ன் எனப்படும் திருத்தப்பட்ட படிவத்தின் மூலம் நீங்கள் செய்த தவறினை சரி செய்து கொள்ளலாம்.

 மேல் முறையீடு செய்யலாம்

மேல் முறையீடு செய்யலாம்

ஒரு வேளை திருத்தப்பட்ட படிவத்திலும் தவறு செய்து விட்டால், அதாவது வருமானத்தினை தவறாக குறிப்பிட்டு விட்டால் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். ஆக அந்த நேரத்தில் பதற்றப்படாமல் கவலைப்படுவதை தவிர்த்து, கூலாக அடுத்து என்ன செய்யலாம் என யோசிப்பதே சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What to do if you have inadvertently shown high income in income tax filing?

What to do if you have inadvertently overstated your income in an income tax return?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.