ஒரு காலக்கட்டத்தில் வயதானவர்களை மட்டும் தாக்கும் சர்க்கரை நோய் பிரச்சனை தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் மாறிவரும் வாழ்க்கை முறையும், உணவு முறையும் தான்.
சரி ஹை சுகர் இருப்பவர்கள் சர்க்கரை அளவை உடனே குறைக்க என்ன சாப்பிடலாம் என பார்ப்போம்.
சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர உங்களுக்கு ஃபைபர் மிகவும் அவசியமாகும். அதனால் ஃபைபர் நிறைந்த காய்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
காய்கறிகளில் பொதுவாக கார்போஹைட்ரேட், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்,டயட்டரி ஃபைபர்,கரோடினாய்ட்ஸ்,ஃபோலிக் ஆசிட்,மக்னீசியம்,விட்டமின் சி மற்றும் விட்டமின் இ ஆகியவை நிறைந்திருக்கும். இவை சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர உதவுவதுடன் நீங்கள் சாப்பிட்ட உணவினை செரிக்க வைக்கவும் உதவிடுகிறது.
சர்க்கரை நோய் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்காவது காய்கறி டயட்டினை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.
பாகற்காயில் அதிகளவு பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இவை தான் நம் உடலில் விட்டமின் ஏவாக சேகரிக்கப்படுகிறது. இதைத் தாண்டி இதில் கால்சியம், பொட்டாசியம்,வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து ஆகியவை உண்டு. இதில் இருக்கக்கூடிய Charantin என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகளவு சர்க்கரையை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவிடும்.
சர்க்கரை நோயாளிகள் உடலில் இருக்கக்கூடிய அதீத சர்க்கரையை குறைக்க வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை சாப்பிடலாம், இது கைமேல் பலன் தரும்.
முதல் நாள் இரவிலேயே வெண்டைக்காயை கட் செய்து தண்ணீரில் ஊற வைத்திட வேண்டும். பின்னர் மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி காலையில் குடித்து வர சர்க்கரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.