14 நாட்களில் வயிற்று கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த 5 உடற்பயிற்சிகள் மறக்கமால் செய்திடுங்க


வீட்டிலேயே வயிற்று கொழுப்பை எளியமுறையில் குறைக்கலாம். இதற்கு ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம். 

பட்டர்ப்ளை கிரென்ச்

வானத்தை பார்த்தவாறு உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து தரையில் படுக்க வேண்டும்.

முழங்கால்கள் இரண்டும் பக்கவாட்டில் சமமாக தரைமட்டத்தில் இருக்க வேண்டும்.

கைகளை தலையின் பின்புறம் வைத்து வயிற்று பகுதியை உயர்த்தி கால்களை நோக்கி மடக்க வேண்டும்.

சைடு டூ சைடு 

14 நாட்களில் வயிற்று கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த 5  உடற்பயிற்சிகள் மறக்கமால் செய்திடுங்க

வானத்தை பார்த்து படுத்து முழங்கால்களை மடக்க வேண்டும். கைகள் இரண்டும் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விட்டபடி வலது கையை வலது கால் நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் இதே பயிற்சியை இடதுபுறம் செய்ய வேண்டும்.இந்த பயிற்சியை தொடர்ந்து பதினைந்து முறை செய்து பார்க்க வேண்டும்.

ப்ரண்ட் பிளான்க்

14 நாட்களில் வயிற்று கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த 5  உடற்பயிற்சிகள் மறக்கமால் செய்திடுங்க

முழங்கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி தரையை பார்த்தவாறு படுக்க வேண்டும்.பின்னர் கீழ் நோக்கி உடலை தாழ்த்தி கால்களை அகலமாக விரிக்க வேண்டும்.

இதனை செய்யும் போது முதுகுப்பகுதி நேராகவும்,இடுப்பு மேல்நோக்கியும் ,கழுத்து லகுவாகவும் இருக்க வேண்டும்.இந்த நிலையில் மூன்று நொடிகள் இருக்க வேண்டும்.இந்த முறையை பத்துமுறை செய்ய வேண்டும்.

பிங்கர் டூ டோ 

இந்த பயிற்சி வயிற்று சதையை குறைப்பதற்கான சிறந்த பயிற்சியாகும். மேல்நோக்கி படுத்து கால்களை நேராக வைத்து வானத்தை நோக்கி உயர்த்த வேண்டும்.

பின்னர் கைகளை கால் விரல்களை நோக்கி உயர்த்தி மூச்சினை விட வேண்டும். இந்த பயிற்சியை இரண்டு வகைகளாக பதினைந்து முறை செய்ய வேண்டும்.

சிசர்ஸ்

இந்த பயிற்சியானது வீட்டிலேயே வயிற்று சதையை குறைப்பதற்கு உதவுகிறது.மேலே பார்த்தவாறு படுத்து கால் விரல்களை தலையின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும்.

இடதுமுழங்கையை உயர்த்தி வலது முழங்காலை தொட வேண்டும்.பின்னர் பழைய நிலைக்கு வந்து, வலது முழங்கால் மூலம் இதே பயிற்சியை செய்ய வேண்டும்.பின்னர் இதனை இருபுறமும் மாற்றி பதினைந்து முறை செய்ய வேண்டும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.