இலங்கைக்கு எதிரான 2 ஆவது ரி 20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி இலங்கை அணியுடன் 3 ரி 20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதற்கமைய கடந்த 7ஆம் திகதி இலங்கை , அவுஸ்திரேலியா இடையே முதல் ரி 20 போட்டி நடைபெற்றது. இதில், இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ரி 20 போட்டி நேற்று (08) கொழும்பில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டகளை மொத்தமாக பெற்றது. சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய வீரர் கேன் ரிட்சர்ட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 125 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் பெற்றது.
இதன் மூலம் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
மேலும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மேத்திவ் ஒய்ட் ஆட்ட நாயகனாக தெரிவானார்.