சென்னை:
44வது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.
‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெற்றதில்லை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கப்படுகின்றன. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளில் இருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நேரு உள்விளையாட்டு அரங்குக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான லோகோ-ஐ முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.