Nothing Phone 1: லண்டனை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட புதிய டெக் நிறுவனம் நத்திங். தற்போது நிறுவனம் புதிய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஜூலை 12 அன்று இரவு 8:30 மணிக்கு இதன் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது.
இதன் தலைமை செயல் அலுவலர் கார்ல் பெய், ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸில் இருந்து பிரிந்து, நத்திங் எனும் பிராண்டை இவர் உருவாக்கினார். இவர்களின் முதல் தயாரிப்பாக நத்திங் இயர் (1) ப்ளூடூத் TWS இயர்பட்ஸ் சந்தையில் அறிமுகமானது.
நத்திங் பிராண்ட்
விற்பனையில் கணிசமான வளர்ச்சியை கண்டதைத் தொடர்ந்து, நிறுவனம் தற்போது ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்துள்ளது. தங்களின் ஸ்மார்ட்போன், இதுவரை கூறப்பட்டு வந்த பொய்களை எல்லாம் உடைக்கும் என கார்ல் பெய் தெரிவித்திருந்தார்.
iOS 16: காசில்லாம ஆப்பிள் ஐபோன் வாங்கிக்கலாம்!
உண்மையான போனை, அதுவும் ஆப்பிள் ஐபோன்களுக்கு நிகரான ஆண்ட்ராய்டு போனாக நத்திங் போன் 1 இருக்கும் என அவர் உறுதியளித்துள்ளார். பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தின் வாயிலாக இந்தியாவில் நத்திங் போன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
நத்திங் போன் 1 அம்சங்கள்
இதுவரை வெளியான தகவல்களின்படி, நத்திங் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் கொண்டு இயங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதன் பின்பக்கம் டிரான்ஸ்பரெண்ட் கிளாஸ் கொண்ட வடிவமைப்பில் இருக்கும்.
மேலும் மறு உருவாக்கம் செய்யப்பட்ட அலுமினியத்தால் இந்த போனின் பிரேம்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் 6.55 இன்ச் 90Hz OLED டிஸ்ப்ளே கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் நத்திங் போன் 1-இல் இருக்கும்.
ரேம் மெமரியாக 8ஜிபியும், ஸ்டேரேஜ் மெமரியாக 128ஜிபி வழங்கப்படலாம். 4,500mAh இரட்டை செல் கொண்ட பேட்டரி இதில் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ஊக்குவிக்க பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கிடைக்கும்.
USB-C: 2024 முதல் யுஎஸ்பி டைப்-சி மட்டும் தான் இருக்கும்!
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான NothingOS ஸ்கின் இதில் நிறுவப்பட்டிருக்கும். மிகவும் லைட்டான ஸ்கின்னாக இது இருக்கும் என நத்திங் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
போனின் விலை குறித்து பல தகவல்கள் வெளியானாலும், நிறுவனம் ஸ்மார்ட்போன் விலையை குறைக்க முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சுமார் ரூ.35,000 என்ற விலையில் போனை சந்தைப்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
நத்திங் போன் 1 தயாரிப்பு
இதன் காரணமாக, உள்நாட்டிலேயே போனை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்நாட்டில் போன் தயாரிக்கப்பட்டால் பயனர்களுக்கு அதை நல்ல விலையில் கொடுக்கலாம் என்பது நிறுவனத்தின் நோக்கமாகத் தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் நத்திங் போன் (1), சந்தையில் கால்தடம் பதித்து புழக்கத்துக்கு வரும்போது தான் நிறுவனத்தின் உறுதிமொழிகள் உண்மையில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
நத்திங் போன் (1) குறித்து உங்களின் எதிர்பார்ப்புகளை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்களை தெரிந்துகொள்ள சமயம் தமிழ் டெக் பக்கத்துடன் இணைந்திருங்கள்.