Video: பாலம் ஒன்று திறப்பு விழாவிலேயே சரிந்த அதிர்ச்சி சம்பவம்

மெக்ஸிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், மரப்பாலம் ஒன்றின் திறப்பு விழாவின் போது, புத்தம் புதிய பாலம் சரிந்து, அதிலிருந்த பலர் கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோவின் குர்னவாகா நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் திறக்கப்பட்டது. சம்பவத்தின் போது, ​​மேயர் மற்றும் பலர் உடனிருந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் மரப் பலகைகளால் ஆனது. பாலத்தின் உலோக சங்கிலிகள் சமீபத்தில் மறுவடிவமைக்கப்பட்டன. 

இந்நிலையில், மெக்சிகோவின் இந்த தரைப்பாலம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில், துரதிஷ்டவசமாக பாலம் சரிந்தபோது, ​​மேயர் மற்றும் சுமார் இரண்டு டஜன் பேர் சுமார் 3 மீட்டர் (10 அடி) பள்ளத்தில் விழுந்தனர். ஓடை படுகையில் பாறைகளும், கற்களும் இருந்தன. அதன் மீது விழுந்ததால் காயமடைந்தவர்களில் நகர சபை உறுப்பினர்கள் போன்ற உள்ளூர் அதிகாரிகளும் அடங்குவர்.

மேலும் படிக்க | Mystery in Mexico: பிறந்த சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்மம்

இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. பலகைகள் சங்கிலிகளில் இருந்து பிரிந்ததில் பிறகு சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேயர் ஜோஸ் லூயிஸ் யூரியோஸ்டெகுயின் மனைவி மற்றும் நிருபர்கள், பாலம் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மக்களில் அடங்குவர் என்று மோரேலோஸ் கவர்னர் குவாஹ்டெமோக் பிளாங்கோ கூறினார். குர்னவாக்கா நாட்டின் மோரேலோஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் காயமடைந்ததாக குர்னவாகா நகர அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேயர் ஜோஸ் லூயிஸ் யூரியோஸ்டெகியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் ஆபத்தில் இல்லை என்று நகர நிர்வாகம் கூறியது.

மேலும் படிக்க | Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்; நெஞ்சை உருக்கும் அவல நிலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.