அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு… தொழிற்சாலையில் சக ஊழியர் 3 பேரை சுட்டுக்கொன்ற நபர்

அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் உள்ள சோலம்பியா இயந்திரத் தொழிற்சாலையில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்த தகவலின்படி, நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. 23 வயதுடைய நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஊழியர் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, பதில் தாக்குதல் நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உட்பட அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதுள்ளார். அதைத்தொடர்ந்து காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாஷிங்டன் கவுண்டி கவர்னர் டக்ளஸ் டபிள்யூ. முல்லண்டோர்(Douglas W. Mullendore), துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் அறியவில்லை என்றும், சந்தேகிக்கப்படும் நபர் மீது வேறு குற்றச்சாட்டுகள் இல்லை என்றும் கூறினார்.

ஏற்கெனவே, டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு, ஓக்லஹோமா மருத்துவமனை துப்பாக்கிச்சூடு என அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது அமெரிக்காவில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.