அமெரிக்கா, ஐரோப்பாவில் விரைவில் ரெசிஷன்.. உச்சகட்ட பீதியில் இந்திய ஐடி – BPM நிறுவனங்கள்..!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, சீனாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடு, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை உலக நாடுகளின் பணவீக்கத்தை அதிகரித்தது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகியுள்ளது.

இந்தப் பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியைப் போலவே உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டியை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில் ஐடி மற்றும் பபிஎம் நிறுவனங்கள் பீதியில் உள்ளது, ஏற்கனவே உலக முழுவதும் டெக் பங்குகள் சரிந்து வரும் நிலையில் ஐடி மற்றும் BPM நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி ஐடி நிறுவனங்களை மட்டும் அல்லாமல் ஐடி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட்டியை உயர்த்த ஆரம்பித்த வங்கிகள்.. சாமானியர்களுக்கு கூடும் சுமை?

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

வல்லரசு நாடான அமெரிக்காவில் 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மூலம் எந்த அளவிற்குப் பாதித்தது என அனைவருக்கும் தெரியும். தற்போது கிட்டதட்ட இதேபோன்ற நிலை தான் பணவீக்கத்தாலும், எரிபொருள் விலை உயர்வாலும் தற்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் நடக்க உள்ளது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ரெசிஷன்

ரெசிஷன்

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் உருவாக உள்ள ரெசிஷன் மூலம் ஐடி துறையில் சேவை பிரிவில் இருக்கும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களும், BPM பிரிவில் இருக்கும் பல ஆயிரம் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐடி துறை நிறுவனங்களும், ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.

ஐடி சேவை துறை வளர்ச்சி
 

ஐடி சேவை துறை வளர்ச்சி

இந்த ரெசிஷன் மூலம் ஐடி சேவை துறை மார்ச் 2023ஆம் நிதியாண்டின் 12 மாதத்தில் 6.7 சதவீதம் வரையில் மட்டுமே வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 10.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதேவேளையில் பிஎஸ்ஈ ஐடி இன்டெக்ஸ் குறியீடு 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 17 சதவீதம் சரிந்துள்ளது.

Dot Com Bubble வெடிப்பு

Dot Com Bubble வெடிப்பு

இது இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் பங்குச்சந்தையிலும் நிலவுகிறது. ஐடி பங்குகள் சரிவு மற்றும் முதலீட்டை பார்க்கையில் ஐடி துறையில் மீண்டும் Dot Com Bubble வெடித்துள்ளதாகப் பல சந்தை வல்லூனர்கள் கூறுகின்றனர். இதேவேளையில் பல அமைப்புகளில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.9 சதவீதமாகத் தான் இருக்கும் எனக் கணித்துள்ளது.

டெக் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள்

டெக் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள்

ஒருபக்கம் வட்டி விகித உயர்வால் டெக் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களில் முதலீடு செய்வோர் எண்ணிக்கையும், அளவீடும் பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து பணத்தைச் சேமித்து வருகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

மறுபுறம் பெரிய நிறுவனங்கள் பெற்று வந்த வர்த்தகங்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்துள்ளது. இதனால் இந்திய ஐடி – BPM நிறுவனங்கள் தற்போது அதிகப்படியான அச்சத்தில் உள்ளது. அடுத்த 3 முதல் 12 மாதங்களுக்குள் ரெசிஷன் தாக்கம் ஏற்படலாம்.

பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலை

இந்த ரெசிஷன் மூலம் இந்திய ஐடி மற்றும் BPM நிறுவனங்கள் பெறும் வர்த்தக அளவீடுகள் குறையலாம், இதேபோல் சில நிறுவனங்கள் திட்டங்களைத் திரும்பப் பெறலாம். இதேவேளையில் இந்திய ஐடி மற்றும் BPM நிறுவனங்கள் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் அதிகப்படியான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளதால் இவ்விரு நாடுகளிலும் உருவாக்கும் ரெசிஷன் எனப்படும் பொருளாதார மந்த நிலை இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

USD, EU Recession in near mid term; Indian IT companies, IT employees on fear

USD, EU Recession in near mid term; Indian IT companies, IT employees on fear அமெரிக்கா, ஐரோப்பாவில் விரைவில் ரெசிஷன்.. உச்சகட்ட பீதியில் இந்திய ஐடி – BPM நிறுவனங்கள்..!

Story first published: Friday, June 10, 2022, 11:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.