இந்திய அணியை அடித்து நொறுக்கி புதிய சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா!


இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி டி20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது.

டெல்லி அருண் ஜெய்ட்லே மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றி தான் டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சேஸிங்கில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.

இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு ஜோஹன்ஸ்பர்க்கில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் சேசிங் செய்ததே, தென் ஆப்பிரிக்க அணி துரத்தி பிடித்த மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

இந்திய அணியை அடித்து நொறுக்கி புதிய சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா!

Photo Credit: ANI 

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிரட்டிய தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் மில்லர், நேற்றைய போட்டியில் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியை அடித்து நொறுக்கி புதிய சாதனை படைத்த தென் ஆப்பிரிக்கா!

Photo Credit: BCCI

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.