இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, லக்‌ஷயா சென்

ஜகார்த்தா,

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-18, 21-15 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 23-21, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜூங்கை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 11 நிமிடம் நீடித்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.