இலங்கையில் உள்ளக ரீதியிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
இந்த விதி முறை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இருப்பினும் முகக்கவசதத்தை அணிவது தடுக்கப்படவில்லை. முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 2264/9 என்ற 2022 ஜனவரி 25ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்ட இவ்விடயம் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுவாச நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது உகந்தது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன்இ ஊழுஏஐனு-19 PCR சோதனை/ ரெபிட் அன்டிஜன் பரிசோதனையை இதற்கான பரிசோதனையாக மேற்கொள்வதும் நிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.