இலங்கை சனத்தொகையில் 22 வீதமானோருக்கு உணவு நிவாரணம் தேவை

இலங்கை மக்களில் 22 வீதமானோருக்கு உணவு நிவாரணம் தேவையென்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் சனத்தொகையில் 22 வீதமானவர்கள் அல்லது 4.9 மில்லியன் மக்களுக்கு தற்போது உணவு உதவி தேவைப்படுவதாக ஹனா சிங்கர்-ஹம்டி கூறுகையில், குறிப்பிட்டுள்ளார்.

“குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும், அவர்கள் உணவுக்காக பல்வேறு மாற்று வழிகளை கையாண்டுள்ளதை நாங்கள் அவதானித்து உள்ளோம் மேலும் இரசாயன உரம் இல்லாததால் 2021/2022 பெரும் போகத்தில் நெல் அறுவடை 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் 2021 இல் இரசாயன உர இறக்குமதியை தடை செய்ததை தொடர்ந்து உற்பத்திக்கான இறக்குமதி செலவு சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் குழுவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் (HNP) திட்டத்தை இன்று ஆரம்பித்து, பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின்படி தேவையான அத்தியாவசிய மருந்துகள், குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு, அத்தியாவசிய உணவு,பாதுகாப்பான குடிநீர், அவசரகால வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய சேவைகளை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவியாளர்கள் தெரிவிக்கையில், சுமார் 5.7 மில்லியன் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு உடனடி அத்தியாவசிய உதவி தேவைப்படுவதாகவும், HNP இன் கீழ் இலக்கு வைக்கப்பட்ட 1.7 மில்லியன் மக்கள் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான உடனடி தேவையானவர்கள் அடங்குவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.