தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் பல முன்னணி டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் உலக நாடுகளில் இருந்து சமீபத்தில் அலுவலகத்தைத் துவங்கியது.
இதில் பல முக்கியமான நிறுவனங்கள் தற்போது ஊழியர்களை அதிகளவில் சேர்க்கும் பணியை முடுக்கிவிட்டு உள்ளது. இதனால் சென்னை-யில் இருக்கும் பல லட்சம் டெக் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இந்த பட்டியலில் தற்போது ஜூம் நிறுவனமும் இணைந்துள்ளது.
புதிய தொழிலாளர் சட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம்.. என்னென்ன மாற்றங்கள் வரும்?
ஜூம் நிறுவனம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வீடியோ கான்பிரன்சிங் சேவை நிறுவனமான ஜூம் தனது இந்திய ஆப்ரேஷன்ஸ்-ஐ வேகமாக விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து ஜூம் நிறுவன சேவைகளை மெருகேற்றும் பணிகளை செய்ய அதிகப்படியான ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.
ஜூம் சென்னை அலுவலகம்
ஜூம் நிறுவனம் சென்னையில் துவங்கியுள்ள அலுவலகத்தில் R&D சென்டரில் அதிகப்படியான ஊழியர்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருக்கும் டெக் ஊழியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஜூம் இந்திய தலைவர் சமீர் ராஜி
இதுகுறித்து ஜூம் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் மற்றும் இந்தியா தலைவரான சமீர் ராஜி கூறுகையில் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம், குறிப்பாக சென்னை அலுவலகத்தில்.. தற்போது ஐடி சப்போர்ட், டெக் டெவலப்மென்ட் மற்றும் R&D பிரிவில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளம் என தெரிவித்துள்ளார்.
லாக்டவுன்
லாக்டவுன் காலத்தில் வரத்தக துறையிலும், வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலியாக இருந்த ஜூம் கடந்த ஒருவருடமாகப் பயன்பாட்டு நேரமும், அளவும் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது தான்..
ஜூம் வருவாய்
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜூம் 1.07 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் கடந்த வருடத்தைக் காட்டிலும் 12 சதவீத அதிக வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜூம் நிறுவனம் நிறுவனம் தற்போது பல புதிய சேவைகளை உருவாக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.
ஆசிய பசிபிக் டார்கெட்
ஜூம் நிறுவனம் அமெரிக்கா, ஆசிய பசிபிக், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் அதிகப்படியான வருமானத்தைப் பெறுகிறது. இந்நிலையில் ஜூம் நிறுவனம் ஆசிய பசிபிக் பகுதியில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
America Based Zoom increasing employees in Chennai office; Big opportunities for Chennai techies
America Based Zoom increasing employees in Chennai office; Big opportunities for Chennai techies ஊழியர்களை வலை வீசி தோடும் அமெரிக்க நிறுவனம்.. சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்..!