வரலாற்று ரீதியாக ரஷ்யாவுக்கு சொந்தமான நிலப்பரப்பை கைப்பற்றும் காலம் நெருங்கிவிட்டதாக கூறி ஸ்வீடனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்த மிரட்டல் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றே கூறப்படுகிறது.
ரஷ்ய பேரரசை நிறுவிய பீற்றர் மன்னரின் 350வது பிறந்தநாள் விழாவில் பேசுகையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறித்த கருத்தை வெளிப்பட்டுத்தியுள்ளார்.
ஸ்வீடன் பேரரசை வென்று ஐரோப்பாவில் புதிய ரஷ்ய பேரரசை நிறுவியவர் பீற்றர். இந்த வரலாற்று நிகழ்வை குறிப்பிட்டே, எங்கள் நிலம் எங்களுக்கு சொந்தமானது என விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்வீடன் ஒரு காலத்தில் கைப்பற்றி வைத்திருந்த பகுதியை மீட்டே ரஷ்யாவின் தற்போதைய St Petersburg நகரம் உருவானதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
பீற்றர் மன்னர் எந்த நிலத்தையும் பறித்துக்கொள்ளவில்லை, மாறாக உரிமையுடன் எடுத்துக்கொண்டார் என்றே புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வீடனின் பெரும்பகுதி ரஷ்யாவுக்கு சொந்தம் எனவும், தங்களுக்கு சொந்தமான நிலப்பரப்பை மீட்பது தங்கள் கடமை எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி தற்போதைய எஸ்டோனியா தொடர்பிலும் பீற்றர் மன்னரை குறிப்பிட்டு புடின் பேசியுள்ளார்.
இதனால், உக்ரைன் போருக்கு பின்னர் விளாடிமிர் புடினின் பார்வை பால்டிக் நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா பக்கம் திரும்பலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மட்டுமின்றி, நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்ள ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முடிவு செய்துள்ளதும், புடினின் மனக்கணக்கை புரிந்து கொண்டதால் தான் எனவும் கூறப்படுகிறது.
மேலும், சோவியத் தலைவர்களின் தவறால் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பிழை தான் உக்ரைன். அந்த தவறை சரி செய்வது தமது கடமை எனவும் புடின் தெரிவித்துள்ளார்.