மின்சார வாகனங்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஃபெராரி நிறுவனமும் அடுத்ததாக மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த உள்ளது.
தி கிரேட் ரெசிக்னேஷன் தொடரும்.. இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா செய்யலாம்!
வடக்கு இத்தாலியில் ஃபெராரி என்வி நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெராரி நிறுவனம்
ஃபெராரி என்வி நிறுவனம் ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக இடத்தை தேர்வு செய்துவிட்டதாகவும், அதில் பணியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த புதிய தயாரிப்பு ஆலையில் மின்சார கார் உற்பத்தி மட்டுமின்றி பேட்டரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
பங்குகள்
ஃபெராரி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாலும் இந்த செய்தி ஊடகங்களில் கசிந்ததால் இந்நிறுவனத்தின் பங்குகள் 1.3% வரை உயர்ந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
பிராண்ட்
ஃபெராரி நிறுவனம் பல ஆண்டுகளாக தனது பிராண்ட் பெயரை வாடிக்கையாளர்கள் மத்தியில் புகுத்தி நல்ல நிறுவனம் என்ற பெயரையும் பெற்று வருகிறது. மின் வாகனங்கள் உற்பத்தி குறித்த முடிவை ஃபெராரி தாமதமாக தொடங்கினாலும், இந்நிறுவனத்தின் தயாரிப்பு வெளிவந்தவுடன் மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பம்
ஃபெராரி நிறுவனம் மின் வாகனங்களில் மூலோபாயம் மற்றும் அதன் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் மின் வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டு வரும் நிலையில் இந்த குறைபாடுகள் எதுவும் இன்றி தங்களது படைப்பு இருக்க வேண்டும் என்பதில் தீவிர கவனத்துடன் உள்ளது. ஆனால் அதே சமயத்தில் இந்த துறையில் இந்நிறுவனம் செம போட்டியையும் சமாளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Ferrari plots Italian plant expansion for electric vehicles
Ferrari plots Italian plant expansion for electric vehicles | மின்வாகன உற்பத்தியில் களமிறங்கும் ஃபெராரி: செம போட்டியா இருக்கும்போல!