கடலின் நிறங்களில் இருந்து இசையை உருவாக்கிய நாசா விஞ்ஞானி!

நாசா விஞ்ஞானியும், அவரது புரோகிராமர் சகோதரரும் இணைந்து கடல் வண்ணங்களின் படங்களிலிருந்து தரவைப் பயன்படுத்தி இனிமையான மெல்லிசைகளை உருவாக்கினர்.

18 மாதங்களுக்கும் மேலாக, நாசா விஞ்ஞானி மற்றும் அவரது சகோதரர், கடல் வண்ணத் தரவை (ocean colour data) இசைக் குறிப்புகளுடன் இணைக்கும் ஆன்லைன் பிரோகிராமை உருவாக்கி வருகின்றனர். நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரின் விஞ்ஞானிகள் தினமும் ஆய்வு செய்யும் கடல் காட்சிகளின் ஆழ்ந்த அனுபவத்தை, கேட்போருக்கு வழங்குவதற்காக அவர்கள் இதைச் செய்தனர்.

இந்த செவிவழி ஒலி அனுபவத்தின் (aural sonic experience) மூலம் நமது பூமியின் கடலின் இணைப்பைப் பாராட்ட ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்.

நாங்கள் இசையைப் பயன்படுத்துகிறோம், ஏனெனில் அது ஈர்க்கும், ஆற்றல் மிக்கது மற்றும் பல்வேறு பின்னணியில் நம்மை இணைக்கிறது, என்று இணை படைப்பாளரும் கோடார்ட் விஞ்ஞானியுமான ரியான் வாண்டர்முலன் ஒரு செய்தி அறிக்கையில் கூறினார்.

உருகுவே மற்றும் அர்ஜென்டினாவின் எல்லையில் உள்ள உருகுவே நதியும், பரானா நதியும் இணைவதன் மூலம் உருவான ஒரு முகத்துவாரமான ரியோ டி லா பிளாட்டாவின் கடல் வண்ணப் படத்துடன் வாண்டர்முலன் தனது “ஓசனோகிராஃபிக் சிம்போனிக் அனுபவத்தை” தொடங்கினார்.

வாண்டர்முலன், அதன் அழகைக் கண்டு வியந்தார்.  இது வாண்டர்முலனுக்கு ஒரு யோசனையைக் கொடுத்தது: அவருக்கு முன்னால் இருக்கும் படத்தின் ஒலி எப்படி இருக்கும்?

செயற்கைக்கோள் படங்களிலிருந்து பரிமாற்றத் தரவைப் பிரித்தெடுப்பதன் மூலம் நான் தொடங்கினேன். சிவப்பு, பச்சை, நீல சேனல்களின் வடிவங்களைப் பார்த்தேன். தெளிவாக, அவை ஒரே திசையில் பயணிக்கவில்லை. அங்கே ஏதோ இருந்தது. தரவில் இருப்பதை, நீங்கள் அப்படியே கேட்கிறீர்கள்”என்று அவர் செய்தி அறிக்கையில் கூறினார்.

கடல் வண்ணப் படங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுத்த பிறகு, வாண்டர்முலன் தரவை ஒலியுடன் இணைக்க விரும்பினார்.

இங்குதான் இரண்டாவது வாண்டர்முலன் வருகிறார். ஜான் வாண்டர்முலன். இவர் ரியானின் சகோதரர் மற்றும் கணினி புரோகிராமர் ஆவார்.

டிஜிட்டல் மியூசிக் தயாரிப்பில் எனக்கு அனுபவம் உள்ளது, ஏனென்றால் நான் என்னை ஒரு ராக்ஸ்டாராக கற்பனை செய்கிறேன். அதனால் நான் உதவ முடிவு செய்து,  இது ஒரு சிறந்த யோசனை என்று அவரிடம் கூறினேன் என்று ஜான் செய்திக்குறிப்பில் கூறினார்.

அவரது சகோதரரிடமிருந்து தரவைப் பெற்ற பிறகு, ஜான் ஒரு பிரோகிராமட்டிக் இண்டெர்ஃபேஸ் (programmatic interface) உருவாக்கினார், அது தரவை இசைக் குறிப்புகளாக மொழிபெயர்க்கிறது. பின்னர் அவர் கருவியை மாற்றியமைத்தார், இதனால் மொழிபெயர்க்கப்பட்ட தரவு’ டிஜிட்டல் ஆடியோ வொர்க் ஸ்டேஷனில் இறக்குமதி செய்யப்படும்.

இந்தக் கருவி spektune.com என்ற இணையதளத்தில் கிடைக்கிறது, மேலும் இலவசமாக இசையை உருவாக்க எவரும் தரவை இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது.

இசையை உருவாக்க படத்தின் சிவப்பு, பச்சை மற்றும் நீல சேனல்களில் இருந்து வரும் தரவைப் பயன்படுத்தினர். ரியோ டி பிளாட்டாவைத் தவிர, சகோதரர்கள் மியூசிக்கல் டிராக்கை உருவாக்க பெரிங் கடல் மற்றும் பவளக் கடல் (Bering Sea and Coral Sea) ஆகியவற்றின் படங்களையும் பயன்படுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.