ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ள நிலையில், ஈரோட்டில் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேரு வீதியைச் சேர்ந்த கறி வெட்டும் தொழிலாளி முகமது ஷெரீஃப், திருநாவுக்கரசு என்பவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கடனாக பெற்ற நிலையில் கடனை திருப்பி கொடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த திருநாவுக்கரசு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது ஷெரீப் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய வீரப்பன்சத்திரம் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர்.