கன்னியாகுமரி மாவட்டத்தில் கார் மீது பைக் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் மகன் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் காடஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் புதுக்கடை பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது மகன் அஜின்(22) நேற்று உறவினர் வீட்டிற்கு செல்ல புதுக்கடையில் இருந்து கருங்கல் ரோட்டில் சென்றுள்ளார்.
அப்போது தொலையாவட்டம் மின்வாரிய அலுவலகம் அருகே ரோட்டில் இருந்த பள்ளத்தில் பைக் இறங்கியதால் நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
wஇந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அஜின் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கருங்கல் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.