கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த துரைராஜ் மகள் அபிநயா (வயது 16). இவர் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த அஜித் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், சம்பவம் நடந்த அன்று சிறுமி அபிநயாவை ஆசை வார்த்தை கூறி அஜித் வெளியில் அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமி அபிநயாவின் தாய் மதுராம்பாள் அவனமானமாக கருதி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மதுராம்பாளை, அஜித்தின் உறவினர்கள் மற்றும் அபிநயா பார்க்க வவந்துள்ளார்.
ஆனால் அவர்களை, மதுராம்பாளின் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சிறுமி அபிநயா, அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், இன்று சிறுமி அபிநயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிறுமியின் தற்கொலை குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.