சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இனிதே நடந்து முடிந்தது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்.
திரைப்பிரபலங்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தனர், பிரபலங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
சிவப்பு நிற புடவையில் தேவதையாய் நயன்தாரா ஜொலி ஜொலிக்க கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது நயன்தாராவின் புடவை தான், கரிஷ்மா மற்றும் மோனிகா என்ற வட இந்திய டிசைனர்களால் கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.
நயன்தாராவின் மேற்சட்டையில், பெண் தெய்வம் லட்சுமியின் ‘மோட்டிவ்’ டிசைன்களும், நயன்- விக்னேஷ் சிவனின் காதலை பறைசாற்றும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஏற்றவாறு கழுத்தை ஒட்டிய நயன்தாரா அணிந்திருந்த சோக்கர் வைடூரியம் மற்றும் போல்கி கற்களால் ஆனது.
இரண்டாவதாக மரகதத்தால் ஆன ரஷ்யன் பேட்டர்ன் நெக்லசும், ஏழு அடுக்குகள் கொண்ட ஆரமும் அணிந்திருந்தார்.
இவை அனைத்துமே மரகதக் கற்களால் ஆனது, இதன் மதிப்பு மட்டுமே சுமார் 3 கோடிகளை தாண்டும் என தெரிகிறது.
இதுதவிர நயன்தாராவுக்கு சுமார் 5 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளாராம் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவோ, விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றை பரிசளித்துள்ளாராம்.
இதுதவிர விக்னேஷ் சிவனின் சகோதரிக்கு தங்க நகைகளையும் பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.