குடியரசு தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சி! சரத்பவாரை சந்தித்தார் கார்கே…

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளருக்கு எதிராக களமாட, எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அதன் அடுத்தக்கட்டமாக  பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, ஒத்தகருத்துக்கள் எதிர்க்கட்சிகளிடையே பேசி வரும் கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை  நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால்,  வேட்பாளர்கள் அறிவிப்பது குறித்து கட்சிகளிடையே ஆலோசனை தொடங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதியை  நேற்று அகில இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்தது. அதன்படி,  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 21ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் குறித்து ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளளார். இதைத்தொடர்ந்து,  ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவரான கார்கே, என்சிபி தலைவர் சரத் பவாரை  அழைத்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளதாக  கூறியதுடன்,  அவரது வழிகாட்டு தலைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவரான கார்கே, என்சிபி தலைவர் சரத் பவாரை  அழைத்துப் பேசியதாக தெரிவித்தார். தங்களது யோசனையை சரத்பவார் ஆதரித்துள்ளர் என்றும் கூறினார்.

தொடர்ந்து, கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினோய் விஸ்வம் எம்.பி.யிடம் பேசியுள்ளார். இந்த தகவலை பினோய் விஸ்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் குடியரசு தேர்தளுக்கான பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ, பிற எதிர்கட்சிகளிடம் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தலில் மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் 4,033 பேர் என மொத்தம் 4,809 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.